/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு; கடலுாரில் மத்திய குழு ஆய்வு
/
பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு; கடலுாரில் மத்திய குழு ஆய்வு
பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு; கடலுாரில் மத்திய குழு ஆய்வு
பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு; கடலுாரில் மத்திய குழு ஆய்வு
ADDED : டிச 08, 2024 11:48 PM

கடலுார் : பெஞ்சல் புயல் கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, கடலுார் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள 150 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
நீர்நிலைகள் உடைந்தன. விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். பின், அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
அப்போது, வெள்ள பாதிப்பு சேதங்கள், மீட்பு நடவடிக்கைகள், நிவாரணப்பொருட்கள் வழங்கிய விவரங்கள் வீடியோ பதிவுகளாக தொகுக்கப்பட்டு, மத்திய குழுவினர் பார்வைக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
ஆய்வு கூட்டத்தில், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ககன்திப்சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் அமுதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.