/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்காச்சோளம் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
/
மக்காச்சோளம் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
ADDED : டிச 03, 2024 06:40 AM

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றியத்தில் பெய்த கனமழையால் மக்காச்சோளம் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மங்களூர் ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், வரகு, பருத்தி பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வர். நடப்பாண்டில் பயிர்களை சாகுபடி செய்ததில், மக்காச்சோளம் பயிர்கள் கதிர் முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது.
இந்நிலையில், புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக மங்களூர் ஒன்றிய கிராமங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனால், மக்காச்சோளம் பயிர்கள் சாய்ந்து, விளை நிலங்களில் தேங்கிய நீரில் மூழ்கியது. பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து மகசூலை எதிர்பார்த்த நிலையில், மழை சேதத்தால் கவலை அடைந்துள்ளனர்.
மங்களூர் ஒன்றிய வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை ஆய்வு செய்தனர்.