ADDED : செப் 15, 2026 09:14 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம், செப். 16 –
சிதம்பரம் அடுத்த சி. கொத்தங்குடி கிராமத்தில் இருந்த மார்பளவு அம்பேத்கர் சிலை நேற்று முன்தினம் இரவு சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அதேபகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் சிவக்குமார்,28; குடிபோதையில் சிலையை சேதப்படுத்தியது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார், சிவக்குமாரை நேற்ற கைது செய்தனர்.
