/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் அபாயம்
/
பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் அபாயம்
ADDED : டிச 15, 2025 06:57 AM

கடலுார்: பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலுார், புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில் தெரு (மைதானம் செல்லும் வழி அருகில்) சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், இரு தெருக்களிலும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மேன்ேஹால் வழியாக கழிவுநீர் வழிந்தோடி சாலையில் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது.
மாநகராட்சி ஊழியர்கள், அடைப்பு ஏற்படுவதை நிரந்தரமாக சரி செய்யாமல் பெயரளவில் மட்டுமே செய்கின்றனர்.
இதனால் அடிக்கடி கழிவுநீ ர் தேங்கி வழிந்தோடுகிறது. துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லை உற்பத்தியால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுவதை நிரந்தரமாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

