ADDED : நவ 08, 2025 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: மின்கம்பம் முறிந்து விழும் நிலையில் உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேத்தியாத்தோப்பு, வடக்கு மெயின்ரோடு, பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டு, 30 ஆண்டுகள் ஆகின்றது. தற்போது இந்த மின்கம்பத்தில், சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில், மின்கம்பம் உள்ளது.
இந்த மின் கம்பத்தினை மாற்றித்தர அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
இது குறித்து சமூக நல ஆர்வலர்கள் கூறுகையில், 'மின் கம்பம் முறிந்து விழுந்தால் சென்னிநத்தம் பகுதி மக்கள் பாதிப்பிற்குள்ளாவர். அதனால், சம்மந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.

