/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டிரான்ஸ்பார்மர் அருகில் விபத்து அபாயம்
/
டிரான்ஸ்பார்மர் அருகில் விபத்து அபாயம்
ADDED : மே 27, 2025 07:03 AM
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சியில் டிராான்ஸ்பார்மர் அருகே குப்பையை சேமிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் வீடுகள், கடைகளில் சேகரிக்கும் குப்பையை சேமிக்க இடவசதி இல்லை. இதனால் சேமிக்கும் குப்பையை அந்தந்த இடங்களிலேயே எரித்தும், ஆற்றங்கரைகள், தனியார் இடங்களிலும் கொட்டி வருகின்றனர்.
இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. காந்தி தெரு, கந்தசாமி தெரு உட்பட பல இடங்களில் சேரும் குப்பையை அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே குவித்து வைக்கின்றனர். இதனால் தீ விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, குப்பை கொட்டுவதை நகராட்சி ஊழியர்கள் தவிர்க்க வேண்டு மென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

