/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்
ADDED : ஆக 20, 2025 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கு றிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலப்பாக்கம் பகுதியில், 1000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் புஜண்டேஸ்வரர் கோவில் அருகே உள்ள, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில்இருந்து, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்களில் ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியில் தெரிகின்றன.
இதனால், மேல்நிலைத் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

