/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கண்டரக்கோட்டை ஆற்றில் அபாய எச்சரிக்கை பலகை
/
கண்டரக்கோட்டை ஆற்றில் அபாய எச்சரிக்கை பலகை
ADDED : ஜன 18, 2025 02:13 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் தினமலர் செய்தி எதிரொலி காரணமாக பள்ளமாக உள்ள பகுதியில் அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் இன்று பொங்கல் விழாவையொட்டி ஆற்றுத்திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி ஆற்றின் நடுக்கரையில் கடந்த 2 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தில் 30 அடி அகலத்தில் 10 ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு நீரோட்டம் செல்கிறது.
நாளை ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் சிறுவர்கள் பள்ளத்தில் குளிக்க நேரிட்டால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக நேற்று 'தினமலர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
இதனையடுத்து நேற்று அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், கண்டரக்கோட்டை ஊராட்சி சார்பில் நீரோட்டம் உள்ள பள்ளமான பகுதி என அபாய எச்சரிக்கை பலகை வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.