/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆபத்தான மாடி கட்டடம் சிதம்பரத்தில் இடித்து அகற்றம்
/
ஆபத்தான மாடி கட்டடம் சிதம்பரத்தில் இடித்து அகற்றம்
ஆபத்தான மாடி கட்டடம் சிதம்பரத்தில் இடித்து அகற்றம்
ஆபத்தான மாடி கட்டடம் சிதம்பரத்தில் இடித்து அகற்றம்
ADDED : நவ 28, 2024 06:58 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில், மழை காரணமாக பயன்படுத்தப்படாமல் ஆபத்தான நிலையில் இருந்த மாடி கட்டடம், நகராட்சியால் இடித்து அகற்றப்பட்டது.
சிதம்பரம் பகுதியில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சிதம்பரம் கீழவீதியில் கோவில் வாயில் அருகே இருந்த பெரிய வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது. அதனையடுத்து, மின் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில், மரத்தை வெட்டி அகற்றினர்.
மேலும், சிதம்பரம் சின்ன செட்டி தெருவில் பழுதடைந்த மாடிவீடு, மழையால் ஜன்னல் பகுதி இடிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. அதையடுத்து, இதுகுறித்து தகவலின்பேரில், நகராட்சி ஆணையர் மல்லிகா, கவுன்சிலர் ஜேம்ஸ்விஜயராகவன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதையடுத்து, பாதுகாப்பு கருதி, பொக்லைன் உதவியுடன் வீட்டை முழுவதுமாக இடித்து அகற்றினர்.