/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகாளய அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
/
மகாளய அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ADDED : அக் 03, 2024 03:00 AM

கடலுார் : மகாளய அமாவாசையை முன்னிட்டு, கடலுார் சில்வர் பீச் மற்றும் விருத்தாசலம் பகுதியில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரளானவர்கள் கூடினர்.
புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசையில், நீர்நிலைகளில் நீராடி அந்தணர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நேற்று மகாளய அமாவாசை என்பதால் கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஏராளமானோர் குவிந்தனர்.
கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு அர்ச்சகர்கள் மூலம் தர்ப்பணம் கொடுத்தனர். அதேபோன்று, விருத்தாசலம் மணிமுக்தாற்றில் அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிப்பட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் சிவப்பிரியை குளக்கரையில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.