ADDED : நவ 18, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் ; பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூரைச் சேர்ந்தவர் சுதாகர் மனைவி மணிமொழி, 27. திருமணமாகி, 7 வயதில் பிரனிதா என்ற மகள் உள்ளார். கணவன், மனைவி இடையே பிரச்னை காரணமாக மணிமொழி தாய் வீடான தாழநல்லுாரில் வசித்து வந்தார்.
கடந்த 7ம்தேதி இரவு 11:00 மணியளவில் மணிமொழி தனது குழந்தையுடன் வெளியே செல்வதாகக்கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மணிமொழி தந்தை கொளஞ்சி புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, மணிமொழி உட்பட இருவரை தேடி வருகின்றனர்.