ADDED : பிப் 09, 2026 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே மாயமான பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் திருவா சகமூர்த்தி மகள் தேவிலட்சுமி, 22; இவர், கடந்த 7ம் தேதி விவசாய வயலில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், திருவாசகமூர்த்தி குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

