ADDED : மார் 03, 2026 02:49 AM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை, சண்முகா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் மவுரியா,26; பி.இ., முடித்துவிட்டு விழுப்புரம் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 27ம் தேதி காலை வேலைக்கு செல்வதாக கூறி சென்ற மவுரியா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதுகுறித்து மவுரியா தாய் மலர் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
