ADDED : நவ 12, 2026 10:00 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: கடைக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் அறிவாசகன் மகள் அஸ்வினி, 21; இவர், கடந்த 11ம் தேதி மளிகை பொருட்கள் வாங்க வீட்டில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டைபோலீசார் வழக்குப் பதிந்து, அஸ்வினியை, தேடிவருகின்றனர்.
