தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ராமகிஷ்ணா பள்ளியில் என்.எஸ்.எஸ்., தின விழா 

ராமகிஷ்ணா பள்ளியில் என்.எஸ்.எஸ்., தின விழா 

ராமகிஷ்ணா பள்ளியில் என்.எஸ்.எஸ்., தின விழா 


ADDED : செப் 24, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம், செப். 25 –

சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில் என்.எஸ்.எஸ் தினம் கடைபிடிக்கப்பட்டது

  இந்தியாவின் கல்வி அமைச்சராக இருந்த வி.கே.ஆர்.வி. ராவ் என்பவரால், 1969ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி, மேல்நிலைப் பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., அமைப்பு அறிமுகப் படுத்தப்பட்டது.

இந்த அமைப்பின் நோக்கம் எனக்காக அல்ல உங்களுக்காக என்ற கருத்தை மாணவர்களிடையே வலியுறுத்தி மற்றவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற வழக்கத்தை நிலை நிறுத்தி வருகிறது.

 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 24 ம் தேதி என்.எஸ்.எஸ்., நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ண மேல்நிலைப் பள்ளி, என்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கரன் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் சுந்தரி வரவேற்றார். என்.எஸ்.எஸ்., அலுவலர் தர்மராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us