/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார்- விருதை மார்க்கத்தில் பகலில் ரயில் வசதி தேவை! சென்னை பயணிகள் ரயிலை நீட்டிக்கவும் கோரிக்கை
/
கடலுார்- விருதை மார்க்கத்தில் பகலில் ரயில் வசதி தேவை! சென்னை பயணிகள் ரயிலை நீட்டிக்கவும் கோரிக்கை
கடலுார்- விருதை மார்க்கத்தில் பகலில் ரயில் வசதி தேவை! சென்னை பயணிகள் ரயிலை நீட்டிக்கவும் கோரிக்கை
கடலுார்- விருதை மார்க்கத்தில் பகலில் ரயில் வசதி தேவை! சென்னை பயணிகள் ரயிலை நீட்டிக்கவும் கோரிக்கை
ADDED : டிச 10, 2024 06:15 AM

விருத்தாசலம்: கடலுார்- விருத்தாசலம் மார்க்கமாக, பகல் நேரங்களில் போதுமான ரயில் இயக்க வேண்டும் என, அரியலுார், பெரம்பலுார் உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருச்சி - சென்னை, சேலம் - கடலுார் ரயில் பாதை மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இவ்வழியாக தினசரி பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் உட்பட தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.
இதனால், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து கல்வி, மருத்துவம், வணிகம் என. தினசரி ஆயிரக்கணக்கானோர் ரயிலில் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து கடலுார் மார்க்கத்தில் பகலில் ரயில் சேவை இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது.
இதனால் பஸ்களில் கூடுதல் கட்டணம் கொடுத்தும், வயதானவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், அன்றாட பணிகளுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடலுார் திருப்பாதிரிபுலியூரில் இருந்து தினமும் காலை 5:00 மணிக்கு பாசஞ்சர் ரயில் புறப்பட்டு, விருத்தாசலம் வழியாக சேலம் செல்கிறது. 6:15 மணிக்கு கடலுாரில் இருந்து மற்றொரு ரயில் புறப்பட்டு, விருத்தாசலம் வழியாக திருச்சி செல்கிறது.
அதுபோல், காரைக்கால் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், கடலுாரில் காலை 9:00 மணிக்கு புறப்பட்டு, விருத்தாசலம் வழியாக பெங்களூரு செல்கிறது.
அதுபோல், திருச்சி - கடலுார் மார்க்க ரயில் இரவு 7:00 மணிக்கும், சேலம் - கடலுார் ரயில் இரவு 9:00 மணிக்கும் விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக செல்கிறது. இருப்பினும், பகலில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து கடலுார் மார்க்கமாக செல்ல ரயில் வசதி இல்லை.
இதனால் கடலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக கடலுார் மார்க்கமாக பகல் நேரத்தில் ரயில் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். இது குறித்து கடலுார் எம்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம் ரயில் நீட்டிக்கப்படுமா
விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயில் மூலம் விழுப்புரத்தில் காலை 5:20க்கு புறப்பட்டு, 8:30 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. அதுபோல், அங்கு மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 9:00 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடைகின்றனர்.
இந்த ரயிலை விருத்தாசலம் ரயில் நிலையம் வரை நீட்டித்தால் 45 நிமிடங்கள் இடைவெளியில் கடலுார், பெரம்பலுார், அரியலுார் உள்ளிட்ட நான்கு மாவட்ட பயணிகள் பயனடைவர்.

