/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நில உடமைகள் பதிவு 30ம் தேதி வரை அவகாசம்
/
நில உடமைகள் பதிவு 30ம் தேதி வரை அவகாசம்
ADDED : ஏப் 18, 2025 05:00 AM
சேத்தியாத்தோப்பு: விவசாயிகள் தங்களின் நில உடைமைகளை பதிவு செய்து கொள்ள 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் முகமது நிஜாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மேல்புவனகிரி வட்டாரத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்து விவசாயிகள் தரவுகள் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நில உடைமை விவரங்கள் சரிபார்க்க வரும் 30ம் தேதி வரை அரசால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் எண் போன்று தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும்.
எனவே, விவசாயிகள் ஆதார் எண், நில ஆவண உடைமைகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

