UPDATED : ஆக 11, 2026 04:02 PM
ADDED : ஆக 11, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: முன்விரோத தகராறில் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த கலர்குப்பத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன்,55. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் பியா (எ) தினேஷ்குமார், 24, ராஜிவ்காந்தி மகன் பாயாசம் (எ) ராஜ்மோகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த 8ம் தேதி, கோவிலுக்கு வந்த சுப்ரமணியனை இருவரும் தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, தினேஷ்குமாரை கைது செய்தனர்.
