ADDED : நவ 24, 2024 07:17 AM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி,: குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன்,60; இவரது சகோதரர் சிவசங்கரன். விவசாயிகளான இவர்களுக்குள் நிலப் பிரச்னை உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சவுந்தரபாண்டியன் டிராக்டர் மூலம் நிலத்தில் உழவு ஓட்டினார். அதனை அறிந்த சிவசங்கர், கத்தியை காட்டி சவுந்தரபாண்டியனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, சிவசங்கரனை தேடிவருகின்றனர்.
