தனியார் மயமாக்கலை கண்டித்து பத்திரம் எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்
தனியார் மயமாக்கலை கண்டித்து பத்திரம் எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்
UPDATED : நவ 06, 2026 08:26 PM
ADDED : நவ 06, 2026 08:24 PM

கடலுார்: கடலுாரில் தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பத்திரப்பதிவு துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், இ.டெண்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஆவண எழுத்தர் தேர்வை விரைந்து நடத்திட வேண்டும். பேப்பர் இல்லா திட்டம், தனிநபர் இல்லா திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கடலுார் பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் விஷ்ணுராம், சேகர், பலராமன் புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சரிடம் மனு அளிப்பு:
ஆர்ப்பாட்டம் நடந்த போது, அவ்வழியாக சென்ற அமைச்சர் ராஜ்குமார், காரில் இருந்து இறங்கினார். அவரிடம், சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு, அவர் முதல்வர் மற்றம் பத்திரப்பதிவு துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
சிதம்பரம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பத்திரப்பதிவு ஆவண எழுத்தர்கள் சங்க தலைவர் கனகசபை, செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ரத்தினசபாபதி உள்ளிட்டோர், கண்டன கோஷமிட்டனர்.
