ADDED : நவ 27, 2026 07:15 PM
அ நிறம் | அளவு
கடலுார்: தனியார் மருத்துவமனை மேலாளர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் செங்கல்வராவ்,40; கடலுார், மஞ்சக்குப்பத்தில் தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்தார். இந்நிலையில், நேற்று (நவ.,26) மருத்துவமனை வளாகத்தில் அவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், கடன் தொல்லை அதிகமானதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
