தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஏமாற்றிய கோடை மழை ;கிராம்பு உற்பத்தி பாதிப்பு

 ஏமாற்றிய கோடை மழை ;கிராம்பு உற்பத்தி பாதிப்பு

 ஏமாற்றிய கோடை மழை ;கிராம்பு உற்பத்தி பாதிப்பு


ADDED : ஏப் 11, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கோடை மழை ஏமாற்றியதால், கிராம்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில், தேயிலை செடிகளுக்கு இடையே குறுமிளகு, கிராம்பு, பாக்கு பயிரிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சிறு விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை இல்லாத நிலையில், ஊடுபயிரான இவற்றில் நல்ல விலை கிடைப்பதால், சிறு விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன், 1,000 ஏக்கர் வரையில் பயிர் செய்கின்றனர்.

கடந்த ஆண்டு கிராம்பு நல்ல விளைச்சல் இருந்த நிலையில், நடப்பாண்டு கோடை மழை ஏமாற்றியதால், இதன் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கிலோவுக்கு, 1,000 ரூபாய் வரை விலை கிடைக்கும் நிலையில், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் தனியார் தோட்ட நிறுவனங்களை தவிர, சிறு விவசாயிகளும் தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கிராம்பு செடிகளை ஊடுபயிராக பயிரிட்டுள்ளனர். நல்ல முதிர்ச்சியான மரத்தில் கடந்த ஆண்டு, 25 கிலோ வரை மகசூல் கிடைத்தது.

'ஆனால், நடப்பு ஆண்டு கோடை மழை ஏமாற்றியதால், 5 கிலோ வரை மட்டுமே கிராம்பு விளைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய, மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவி வழங்க வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us