/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில் இறந்த மான், மயில் வனத்துறையில் ஒப்படைப்பு
/
விபத்தில் இறந்த மான், மயில் வனத்துறையில் ஒப்படைப்பு
விபத்தில் இறந்த மான், மயில் வனத்துறையில் ஒப்படைப்பு
விபத்தில் இறந்த மான், மயில் வனத்துறையில் ஒப்படைப்பு
ADDED : மார் 17, 2024 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடியில் வெவ்வேறு விபத்துகளில் இறந்த மான் மற்றும் மயில் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
திட்டக்குடியில் நேற்றுமுன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒன்றரை வயது பெண் மான் இறந்தது.
ஆவினங்குடி அடுத்த கொடிக்களம் தோப்புத்தெருவில் நேற்று மதியம் 2 வயது ஆண் மயில் பறந்தபோது, மின்கம்பியில் இறக்கை பட்டு இறந்தது.
தகவலறிந்த வனத்துறையினர் மான் மற்றும் மயிலை மீட்டு பிரேத பரிசோதனைக்குப்பின் கார்கூடல் மற்றும் நாங்கூர் காப்புகாடுகளில் புதைத்தனர்.