/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையை கடக்க முயன்ற மான் வாகனம் மோதி பலி
/
சாலையை கடக்க முயன்ற மான் வாகனம் மோதி பலி
ADDED : ஜன 20, 2025 06:08 AM

கண்டமங்கலம் : கண்டமங்கலத்தில் சாலையை கடக்க முயன்ற மான் வாகனம் மோதி இறந்தது.
விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலையில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்திற்கு வட மேற்கே, 1.5 கி.மீ., தொலைவில் பண்ணகுப்பம் ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த ஏரியை சுற்றியுள்ள காட்டில் மான், மயில், காட்டுப்பன்றிகள், முள்ளம் பன்றிகள், முயல், கீரிகள் உள்பட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று அதிகாலை 3;00 மணிக்கு பண்ணகுப்பம் ஏரி காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறிய மான் ஒன்று வழி தெரியாமல், கண்டமங்கலம் புதிய போலீஸ் ஸ்டேஷன் அருகே நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளது.
அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த மான் சம்பவ இடத்திலயே இறந்தது.
கண்டமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் மானின் உடலை மீட்டு, விழுப்புரம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.