ADDED : மார் 13, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த தீவளூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ருக்குமணி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அம்சவள்ளி, கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார்.
ஆசிரிய பயிற்றுனர் தங்கமணி, இல்லந்தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கலைக்கோவன், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

