/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட ஊராட்சி வார்டுகள் பிரிப்பதில் தாமதம்: உள்ளாட்சி தேர்தல் நடப்பதில் சிக்கல்
/
மாவட்ட ஊராட்சி வார்டுகள் பிரிப்பதில் தாமதம்: உள்ளாட்சி தேர்தல் நடப்பதில் சிக்கல்
மாவட்ட ஊராட்சி வார்டுகள் பிரிப்பதில் தாமதம்: உள்ளாட்சி தேர்தல் நடப்பதில் சிக்கல்
மாவட்ட ஊராட்சி வார்டுகள் பிரிப்பதில் தாமதம்: உள்ளாட்சி தேர்தல் நடப்பதில் சிக்கல்
ADDED : ஆக 02, 2024 01:37 AM
தமிழக உள்ளாட்சி அமைப்பில் 15 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 கிராமஊராட்சிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து, 36 மாவட்ட ஊராட்சி குழுக்கள் உள்ளன.
ஊரக உள்ளாட்சிகளான கிராமஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30ம்தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, 15 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளுக்கான தேர்தல்2020 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்டது.
இந்நிலையில், 2019ல் நடந்து ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின், ஐந்தாண்டு பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. அதையடுத்து, பதவி காலியாகும்ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கான முன்னேற்பாடு பணிகளை, தமிழக தேர்தல் ஆணையம் இதுவரையில் துவக்கவில்லை.
இதற்கிடையே புதிய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்றவைகளை, தரம் உயர்த்தி அரசு அறிவித்தது. அதன் காரணமாக மாநகராட்சிகளில் பல ஊராட்சிகள் சேர்க்கப்பட உள்ளன. இதனால் ஊராட்சித் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் குறைய வாய்ப்புள்ளது.
அதேப்போல், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களின் எல்லை வரயைறை திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. இப்பிரச்னைகள் குறித்து எந்த பணிகளும் இதுவரை கடலுார் மாவட்டத்தில் துவக்கப்படவில்லை.
மாவட்டத்தில் கடலுார் மாநகராட்சி; சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், வடலுார், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட 6 நகராட்சிகள்; அண்ணாமலை நகர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான், கிள்ளை, லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில், மங்களம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், பரங்கிப்பேட்டை, பெண்ணாடம், சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம், தொரப்பாடி உள்ளிட்ட 14 பேரூராட்சிகள்; கடலுார், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம், விருத்தாசலம், நல்லுார், மங்களூர், மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 683 ஊராட்சிகள் உள்ளன.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை சங்கம், நிர்வாக காரணங்களுக்காக 25 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றியம், 2 ஆயிரம் பேர் வசிக்கக்கூடிய கிராமங்களை 3 ஊராட்சியாகவும் பிரிக்கப்பட வேண்டும் என, தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறது.
எனவே, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பதிவிக்காலம் முடிய, 4 மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் டிசம்பர் மாதம் தேர்தல் நடத்த முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.