/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம்
/
ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம்
ADDED : டிச 22, 2025 04:44 AM
மந்தாரக்குப்பம்: ரேஷன் கடைகளில் சர்வர் வேகம் குறைவால் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக ரேஷன் கார்டுதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னையால் 'பாயின்ட் ஆப் சேல் ' எனப்படும் விற்பனை முனைய கருவி வேகமாக செயல்படாததாலும், தொழில் நுட்ப கோளாறு அடிக்கடி ஏற்படுவதால் ரேஷன் கார்டுதார்களுக்கு பொருட்கள் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது.
வி ரல் ரேகையை ஸ்கேன் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் பொதுமக்களுக்கு கடும் சிரம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னையில் உயர் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என ரேஷன் கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

