/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தவறவிட்ட செயின் உரியவரிடம் ஒப்படைப்பு
/
தவறவிட்ட செயின் உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : பிப் 19, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரத்தில் பக்தர் தவறவிட்ட செயின், 2 மணி நேரத்தில் மீட்டு, ஒப்படைக்கப்பட்டது.
நெய்வேலியை சேர்ந்தவர் நாராயணன், இவர், நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது தனது கை செயினை, கீழவீதியில் வீதியில் தவற விட்டார். இதுகுறித்த புகாரில், சிதம்பரம் நகர இன்ஸ்பக்டர் ரமேஷ்பாபு, மற்றும் உட்கோட்ட குற்ற பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். அதையடுத்து, செயினை கண்டெடுத்த நபரிடமிருந்து, கைச்செயினை, 2 மணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

