UPDATED : நவ 17, 2026 04:36 PM
ADDED : நவ 17, 2026 04:34 PM

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் வெலிங்டன் பாசன வாய்க்காலில் கொட்டப்பட்ட குப்பை குவியலை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள மாளிகைக்கோட்டம், துறையூர், கொசப்பள்ளம், துறையூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரை பயன்படுத்தி நெல், கரும்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தனர்.
அதில், பெண்ணாடம் சுமைதாங்கி வழியே பாசன வாய்க்காலில் அப்பகுதியையொட்டி வசிப்போர், ஓட்டல்களின் கழிவுகளை பாசன வாய்க்காலில் கொட்டி வருகின்றனர். இதனால் வாய்க்காலில் அடைப்பு ஏற்படுவதுடன், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, சுமைதாங்கி பகுதி பாசன வாய்க்காலில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகறை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
