தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குப்பைகளை தரம்பிரித்து வழங்க கோரிக்கை

குப்பைகளை தரம்பிரித்து வழங்க கோரிக்கை

குப்பைகளை தரம்பிரித்து வழங்க கோரிக்கை


ADDED : செப் 27, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை 4 வகையாக தரம்பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டுமென பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) ரஞ்சித் கோரி க்கை விடுத்துள்ளார்.

அவரது செய்தி குறிப்பு:

மங்கலம்பேட்டை பேரூராட்சியில் உள்ள, 15 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகள் 2026ன் படி, வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற் சாலைகள் மற்றும் கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் சேரும் குப்பைகளை, 4 வகையாக தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

உணவு கழிவுகளை பச்சை நிற தொட்டிகளிலும், உலர் கழிவுகளை நீல நிற தொட்டிகளிலும், சுகாதார கழிவுகளை சிவப்பு நிற தொட்டிகளிலும், மின்னணு, உடைந்த கண்ணாடி உள்ளிட்ட சிறப்பு கழிவுகளை கருப்பு தொட்டியிலும் தரம் பிரித்து வழங்க வேண்டும்.

மேலும், 2026ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்காதவர்களின் வீடுகளில் இருந்து குப்பைகளை துாய்மை பணியாளர்கள் சேகரிக்க மாட்டார்கள். மேலும், அதனுடன், அபராதமும் விதிக்கப்படும். எனவே, அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி பேரூராட்சி நிர்வா கத்திற்குஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us