/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார நிலையத்தில் இட நெருக்கடி புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
/
சுகாதார நிலையத்தில் இட நெருக்கடி புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
சுகாதார நிலையத்தில் இட நெருக்கடி புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
சுகாதார நிலையத்தில் இட நெருக்கடி புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
ADDED : ஜூன் 09, 2025 04:53 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இட நெருக்கடியால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நடுவீரப்பட்டில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குமளங்குளம், சிலம்பிநாதன்பேட்டை, விலங்கல்பட்டு, கொடுக்கன்பாளையம், பாலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சிகச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு, பொது மருத்துவம், கண், பல் என, பல்வேறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கடந்த 2009ம் ஆண்டு முதல் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியும் உள்ளது. கடந்தாண்டு பொது மருத்துவ கட்டடம் பழுதானதால் மூடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பொது மருத்துவம், கண், பல் என பல்வேறு சிகிச்சை பிரிவுகள் பிரசவ வார்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிப்பதால் இட நெருக்கடி ஏற்பட்டு, சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தற்போது அலுவலக பயன்பாட்டிற்கென 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் பழுதடைந்த சுகாதார நிலைய கட்டடத்திற்கு புதிய கட்டடம் கட்ட இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.