ADDED : ஜூலை 29, 2025 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; சிதம்பரத்தில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  17வது நகர மாநாடு நடந்தது.
நகரத் தலைவர் அமுதா தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் ஞானமணி, சங்க கொடியேற்றினார். மாநில தலைவர் வாலண்டினா, மாநாட்டை  துவக்கி வைத்து பேசினார்.  நகர  செயலாளர் மல்லிகா அறிக்கை வாசித்தார்.
நகர பொருளாளர் கவிதா வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார். மாவட்ட  செயலாளர் மாதவி,  நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், டாக்டர் ஜீவரத்தினம், ஓய்வு பெற்ற  தலைமை ஆசிரியை ராணி,  சபரி வாழ்த்திப் பேசினர்.
கடலுார் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வேண்டும். சிதம்பரம் பஸ் நிலையம் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

