/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி துவக்கம்
/
என்.எல்.சி.,யில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி துவக்கம்
என்.எல்.சி.,யில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி துவக்கம்
என்.எல்.சி.,யில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி துவக்கம்
ADDED : நவ 16, 2024 04:59 AM

நெய்வேலி : தெற்கு ஆசியாவில் என்.எல்.சி.,யில் அமைக்கப்பட்ட முதல் அனல்மின் நிலையத்தின் கட்டமைப்பு அகற்றும் பணிகள் துவங்கியதையடுத்து அந்நிறுவன தொழிலாளர்கள் கண்ணீர்மல்க உணர்ச்சப்பூர்வமான பிரியா விடை கொடுத்தனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலியில் 1962ம் ஆண்டு துவங்கப்பட்ட என்.எல்.சி., முதல் அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி கடந்த 2020ம் ஆண்டு செப்.30ம் தேதியுடன் நிறைவடைந்தது. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி படிமம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனை முதன்மை எரிபொருளாகக ்கொண்டு இயங்கக்கூடிய தெற்காசியாவின் முதல் அனல்மின் நிலையம் நெய்வேலியில் அமைக்கப்பட்டது.
இந்தோ-சோவியத் கூட்டு முயற்சியில் 600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட முதல் அனல் மின் நிலையில் தலா 50 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட அலகுகளும், தலா 100 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்று அலகுகளும், 1962ம் ஆண்டு முதல் 1970 வரையிலான காலங்களில் மூன்று கட்டங்களாக ஆரம்ப மூலதனச் செலவு ரூ.77.81 கோடியில் உருவாக்கப்பட்டது.
இதில், முதல் அலகில் மின்உற்பத்தி 1962ம் ஆண்டு மே 23ம் தேதி துவங்கியது. அதில் உற்பத்தியான மின்சாரத்தை அதே ஆண்டு ஆக. 5ம் தேதி, அப்போதைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நாட்டிற்கு அ்ப்பணித்தார். இம்மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் முழுவதும். தமிழகத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இந்த மின் நிலையத்திற்கு மாற்றாக 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நெய்வேலி புதிய அனல்மின் நிலையம் (என்.என்.டி.பி.எஸ்.,) முதல் அலகு, வணிக ரீதியிலான மின் உற்பத்தியை துவங்கியதையடுத்து. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முதலாம் அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தியை நிறுத்தும் பணி படிப்படியாக துவங்கி, அதே ஆண்டு செப்.30ம் தேதி முதல் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
செயல்படத் துவங்கியதில் இருந்து 32,66,140 மணி நேரம் அயராது இயங்கி 1,85,390 மில்லியன் யூனிட் மின்உற்பத்தி செயத முதல் அனல் மின் நிலையத்தின் கொதிகலன்கள். டர்பைன்கள். ஜெனரேட்டர்கள் ஓசையின்றி அமைதியாகின. பின்னர், கட்டமைப்புகளை அகற்றுவதற்கு, உரிய டெண்டர் மூலம் ஒரு நிறுவனம் அடையாளம் காணப்பட்டது.
சம்பந்தப்பட்ட தமிழ்நாடு அரசுத் துறைகளிடம் இருந்து சட்டப்பூர்வ அனுமதி கிடைத்ததை அடுத்து என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி தலைமையிலான இயக்குநர்கள் வெங்கடாசலம், சமீர் ஸ்வரூப், சரத்குமார் ஆச்சார்யா முன்னிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய முதல் அன்மின் நிலையத்திற்கு நன்றி தெரிவித்து சிறப்பு பூஜைகளுடன் கட்டமைப்பு அகற்றும் பணி கடந்த 8 ம் தேதி துவங்கியது.
இதுநாள்வரை திறம்பட மின் உற்பத்தி செய்துவந்த நேசமிக்க தாய் அனல் மின் நிலையத்திற்குஎன்.எல்.சி., ஊழியர்கள் கண்ணீர் மல்க உணர்ச்சிபூர்வமான பிரியாவிடை கொடுத்தனர்.