நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மா.கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜவான்ஸ் பவன் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் துரை தலைமை தாங்கினர். மா.கம்யூ., மாநிலக்குழு ரமேஷ்பாபு, இந்திய கம்யூ., மாவட்ட துணைச் செயலாளர் குளோப் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு தொடுத்துள்ள இனப்படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

