நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுாரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். கடலுார் ஒன்றிய செயலாளர் வைத்திலிங்கம், பண்ருட்டி வட்ட செயலாளர் பன்னீர், நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாநிலக்குழு வாஞ்சிநாதன், கிருஷ்ணன் கண்டன உரையாற்றினர்.
இதில், 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய பாக்கியை உடன் வழங்கவேண்டும். கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கேட்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
நிர்வாகிகள் நெடுஞ்சேரலாதன், மணி, வெற்றிவீரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.