ADDED : ஆக 08, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் தாலுகா அலுவலகம் அருகில் இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட குழு உறுப்பினர் அய்யப்பன் தலைமை தாங்கினார். நகர குழுபீர் முகமது, கருப்பையா, மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
குப்பநத்தம் கிராம சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
பின், கோரிக்கை மனுவை தாசில்தார் அரவிந்தனிடம் வழங்கினர்.

