தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் ஆர்ப்பாட்டம்

 கடலுாரில் ஆர்ப்பாட்டம்

 கடலுாரில் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 19, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 05:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில அமைப்பு செயலாளர் பொற்செழியன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம், தொகுப்பூதியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் எல்லை விரிவாக்க பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; கருணை அடிப்படை பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்; என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, புருஷோத்தமன், முகமதுசாதிக், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன், மூத்தகுடிமக்கள் பென்ஷனர் கூட்டமைப்பு, மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சங்கம், அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us