நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலூர், : வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுனில்குமார், கோட்ட செயலர் முருகையன், மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், சரவணன், மணிகண்டன், சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
பா.ஜ., நகர தலைவர் திருமுருகன், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் கார்த்திக், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிச்சையாபிள்ளை, பெருமாள், செல்வம், லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அருள்குமார் நன்றி கூறினார்.

