நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : மேல்பட்டாம்பாக்கத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சரவணன், பொருளாளர் விக்னேஷ், துணைத் தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பாலவீரவேல் துவக்க உரையாற்றினார்.
முன்னாள் மாநில பொதுச் செயலாளர் மங்காப்பிள்ளை, மாநில பேரவை பொது செயலாளர் கவுதமன் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயலாளர் தன வேலாயுதம், பொருளாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.