நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் ஜவான்பவன் அருகில் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்டத் தலைவர் கருப்பையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனிவேல் கண்டன உரையாற்றினார்.
மாவட்ட இணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாபு, திருமுருகன், ஸ்டாலின், துணைத் தலைவர்கள் சங்கமேஸ்வரன், சாந்தகுமாரி பங்கேற்றனர்.
சென்னை மாநகராட்சியில் துாய்மைப் பணியை தனியாருக்கு வழங்கியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

