நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் பகுதியில் வசிக்கும் மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்களுக்கு இலவச மனைபட்டா வழங்க கோரி, விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன், இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலர் கோகுல கிறிஸ்டீபன் தலைமை தாங்கினார்.
பின்னர், துணை தாசில்தார் கோவிந்தனிடம் கோரிக்கை மனு அளித்தனர். துணை தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.