
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகர மா. கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், வெங்கடேசன், விக்னேஷ்வரன் தலைமை தாங்கினர். ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் கோரிக்கைளை விளக்கி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டட பணியை உடனே முடித்து கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்; மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டடங்கள் மழையில் ஒழுகுவதை சரி செய்ய வேண்டும்; மருத்துவ கழிவுக ளை குட்டையில் கொட்ட கூடாது; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சுந்தரபாண்டியன், சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேல்பட்டாம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெயபாண்டியன், ஸ்டீபன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

