
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ரேஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொது வினியோகத் திட் டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் பாக்கெட்டில் வழங்க வேண்டும். அனைத்து கடைகளிலும் எடையாளர் நியமனம். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கி றது.
அதன்படி, விருத்தாசலம் பாலக்கரையில் நேற்று பகல் 11:00 மணியளவில், கோட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட நிர்வாகி கள் தேவராஜ், பிரகாஷ் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், நிர்வாகிகள் பாலு, பாலா, கோபி, சரவணன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் செல்வராஜ் வரவேற்றார். மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா சிறப்புரையாற்றினார். பின்னர், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

