ADDED : ஆக 14, 2026 03:00 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் அகில இந்திய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீரா தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்க திருமலை, ரமணி முன்னிலை வகித்தனர். தேசிய வங்கி ஊழியர் சங்க செயலாளர் நெப்போலியன், அதிகாரிகள் சம்மேளனம் பிரவீன் குமார், இந்தியன் வங்கி ஊழியர் சங்க அமைப்பு செயலர் குருபிரசாத், எஸ்.பி.ஐ., வங்கி ஊழியர் சங்கம் நெடுமாறன், இந்தியன் வங்கி தீபா, நிர்வாகிகள் லட்சுமணன், கண்ணன், வெங்கட், வினோத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஐஸ்வர்யா நன்றி கூறினார்.
