தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

டெங்கு விழிப்புணர்வு கூட்டம்


ADDED : செப் 27, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத்துறை சார்பில், மருந்து வணிகர்களுக்கான டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் மந்தாரக்குப்பம் தனியார் மண்டபத்தில்  நடந்தது. மாவட்ட மருந்து ஆய்வாளர்கள் சுகன்யா, மாசேதுங் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் கதிர்வேல் வரவேற்றார். மாவட்ட மருந்து வணிகர் சங்கம் சார்பில் முக்கிய சுற்றறிக்கை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. 

அதில், டாக்டர் பரிந்துரை இன்றி மருந்து வழங்கக்கூடாது; தொடர் சளி மற்றும் இருமல் பாதிப்புகள் இருந்தால் மருந்துகளை வழங்குவதை தவிர்த்து டாக்டரை அணுகி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்; கடுமையான வயிற்றுவலி, தொடர் வாந்தி, மூச்சு திணறல், ரத்தக்கசிவு, அதிக சோர்வு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்; சுகாதாரத்துறை வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்; உள்ளிட்டவைகள் குறித்து மருந்து வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

கூட்டத்தில்  மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க  செயலாளர் சுந்தரபாண்டியன். பொருளாளர் பாபு, நிர்வாகிகள் விஜயசேகர், அருளாளன், நடராஜன், சையத், குப்புசாமி. அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us