UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 03:34 PM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல் மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல் நிகழ்ச்சி நடந்தது.
சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவி அனிதா தலைமை தாங்கினார். வரலட்சுமி, ஆசிரியர் இந்திரா முன்னிலை வகித்தனர். சப் கலெக்டர் (பொறுப்பு) தனலட்சுமி டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியிட்டார். தொடர்ந்து குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில் குப்பை தொட்டிகள் வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க பொருளாளர் சம்சாத் பேகம் செய்திருந்தார். வேதா நன்றி கூறினார்.
