தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்


ADDED : நவ 22, 2026 10:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 10:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தினசரி ‘ஒரு வார்டு மாஸ் கிளீனிங்’ என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், நாள்தோறும் ஒவ்வொரு வார்டிலும் தீவிர துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, 21வது வார்டு, பெரியார் நகர் பகுதியில் துாய்மை பணி மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்து.முகாமிற்கு, நகராட்சி கமிஷனர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

இதில், நகராட்சி உதவி பொறியாளர் செந்தில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், சுகாதார மேற்பார்வையாளர் வேல்முருகன், நகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், அப்பகுதியில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மழைநீர் தேங்கும் கழிவு பொருட்களை அகற்றினர். அதைத்தொடர்ந்து, அப்பகுதியில் கொசு மருத்து அடிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us