/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுக்கூரைப்பேட்டையில் டெங்கு தடுப்பு கள ஆய்வு
/
புதுக்கூரைப்பேட்டையில் டெங்கு தடுப்பு கள ஆய்வு
ADDED : நவ 18, 2024 06:52 AM

விருத்தாசலம் ; விருத்தாசலம் பகுதியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து கள ஆய்வு நடந்தது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை, விஜயமாநகரம் கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் தேங்கிய மழைநீர், பிளாஸ்டிக் பக்கெட், டிரம், தேங்காய் ஓடு, பயன்படுத்திய டயர்கள், கல் உரல் ஆகியவற்றில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, காய்ச்சிய நீரை பருகவும், காய்ச்சல், இருமல் போன்ற உபாதைகள் ஏற்பட்டால் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு வீடு வீடாகச் சென்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட மலேரியா அலுவலர் (பொறுப்பு) மூர்த்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் துளசிதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், கார்த்திகேயன், ராஜ்மோகன், முல்லைநாதன், பரத் ராஜ்குமார், தாண்டவராயன், அவினாஷ், சதீஷ்குமார் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் உடனிருந்தனர்.