UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 08:26 PM

அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை, வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு செய்தார்
குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரம் கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் நடந்தன.
இதனை வடலுார் வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது வீடுகள் மற்றும், சுற்றுப்புறங்களில் கொசுப்புழு உற்பத்தி ஆக வாய்ப்புள்ள தேவையற்ற டயர்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் உள்ளிட்ட நீர் தேங்கக் கூடிய பொருட்களை அகற்றும் பணிகள் நடந்தன.
சுகாதார ஆய்வாளர்கள் சுகன், வெற்றிவேல், கொசு ஒழிப்பு பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.
