தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ டெங்கு முன் தடுப்பு முகாம்

டெங்கு முன் தடுப்பு முகாம்

டெங்கு முன் தடுப்பு முகாம்


UPDATED : ஆக 23, 2026 04:52 PM

ADDED : ஆக 23, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 04:52 PM ADDED : ஆக 23, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி:திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி ஊராட்சியில் டெங்கு முன் தடுப்பு முகாம் நடந்தது.

ஈ.கீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு, மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

ஈ.கீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஆனந்த், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கர், சுகாதார ஆய்வாளர்கள் விஜயரங்கன், ரவி, அதிகாயன், செந்தமிழ்ச்செல்வன், சித்திரவேல், ஊராட்சி செயலர் ராஜ்குமார் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி, காய்ச்சல் கண்காணிப்பு பணி, குடிநீரில் குளோரினேஷன் ஆய்வு, கொசு மருந்து அடித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மக்களுக்கு கொசுவினால் பரவும் நோய்கள், தடுக்கும் வழிமுறைகள் குறித்து நலக்கல்வி வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us